ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியிடம் இழந்துவிட்டது.
இந்திய அணி தயார் செய்த தரமான புராடக்ட் இவர்தான் : ரவிச்சந்திரன் அஷ்வின்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 25-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும் இளம் வீரர்களின் சிலரது ஆட்டம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடரில் இந்திய அணி சார்பாக சிறப்பாக செயல்படும் ஒரு சில வீரர்களை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அக்சர் பட்டேல் அசத்தலாக விளையாடுவதாக அவரை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆஸ்திரேலியா தொடரை பொறுத்தவரை இந்திய அணி உருவாக்கியதில் தரமான ப்ராடக்ட் என்றால் அது அக்சர் பட்டேல் தான்.
ஏனெனில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனை போன்று அவர் பேட்டிங் செய்கிறார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கோலி அவுட்டான விதம் அவர் டச்சில் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் விராட் கோலி என்ன செய்திருப்பாரோ அதனை அக்சர் பட்டேல் தனது பேட்டிங்கின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க : ஆஸி அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
ஒவ்வொரு பந்திற்கும் அதற்கு ஏற்றார் போன்று சரியான முறையில் பேட்டிங் செய்த அவர் முழுநேர பேட்ஸ்மேன் போன்று விளையாடுகிறார். சமீப காலத்தில் இந்திய அணி தயார் செய்த ஒரு சிறப்பான வீரர் என்றால் நான் அவரை கூறுவேன் என்று அக்சர் பட்டேலை பாராட்டி அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



