ஆஸி அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டு ஆட்டங்களிலுமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி விட்டது.

3 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 25-ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியையாவது பெறுவதற்கு இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருவது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய இந்த கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தகவலை இங்கு காணலாம்.

ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து விட்டதால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. அதேபோன்று ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இப்படி குறிப்பிட்ட இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய தொடரில் இடம் இல்லை.. புதிய முடிவை கையிலெடுத்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) அக்சர் படேல், 7) வாஷிங்டன் சுந்தர், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement