ஆஸ்திரேலிய தொடரில் இடம் இல்லை.. புதிய முடிவை கையிலெடுத்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

Ravindra Jadeja
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 87 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 254 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா எடுத்துள்ள புதிய முடிவு :

அனுபவ வீரரான ரவீந்திர ஜடஜா கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரோடு டி20 வடிவ போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் முன்னணி வீரராக விளையாடி வரும் அவர் ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாகவே நிராகரிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக தற்போதைய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவே தவிர்த்து அக்சர் பட்டேலை அவர்கள் தேர்வு செய்து பிளேயிங் லெவனில் விளையாட வைத்து வருகின்றனர். அதனால் ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கரியர் இனி கேள்விக்குறிதான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தான் தொடர்ந்து கடினமாக உழைத்து 2027 உலக கோப்பை தொடரில் விளையாடும் வகையில் தற்போது ஜடேஜா தயாராகி வருகிறார்.

- Advertisement -

36 வயதான அவர் தனது கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் அடுத்த உலக கோப்பையில் எப்படியாவது விளையாடி விட வேண்டும் என்பதற்காக தற்போது புதிய முடிவு ஒன்றினை ஜடேஜா கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத வேளையில் :

இதையும் படிங்க : முதல் முறையாக ரோஹித் சர்மாவை பார்க்க பயந்தேன்.. முதல் சந்திப்பு குறித்து – திலக் வர்மா பேட்டி

தற்போது உள்நாட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அவர் முடிவு செய்துள்ளார். சௌராஷ்டிரா அணிக்காக களம் இறங்கும் அவர் இரண்டாம் கட்ட போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட உள்ளதாக தெரிகிறது.

Advertisement