முதல் முறையாக ரோஹித் சர்மாவை பார்க்க பயந்தேன்.. முதல் சந்திப்பு குறித்து – திலக் வர்மா பேட்டி

Tilak and Rohit
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர இடதுகை ஆட்டக்காரரான திலக் வர்மா கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்களுடன் 1500 ரன்களை குவித்துள்ளார்.

ரோஹித் சர்மா உடனான முதல் சந்திப்பு குறித்து திலக் வர்மா பேட்டி :

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவருக்கு பிரகாசமான கரியர் இருப்பதாகவும் பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் முறையாக தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த போது கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்து பேச ஆசைப்பட்டதாகவும் ஆனாலும் சிறிய பயம் மற்றும் நடுக்கம் இருந்ததாகவும் ரோகித் சர்மாவுடனான தனது முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : முதல் முறையாக நான் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது ரோகித் சர்மாவை பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆனால் அப்போது கோவிட் பயம் இருந்ததால் ஹோட்டல் அறையில் தனித்தனியே தங்க வைக்கப்பட்டிருந்தோம்.

அப்போது முதல் இரண்டு நாட்கள் ரோகித் சர்மா ஹோட்டலுக்கு வரவில்லை. அதன்பிறகு மூன்றாவது நாள் ஹோட்டலுக்கு வந்தார். நான் அவரை தூரமாக இருந்து பார்த்தேன். அதற்கு முன் நான் அவரை பார்த்தது கிடையாது. பின்னர் அவருடைய குடும்பத்துடன் அவர் காலை உணவு சாப்பிட வந்தார். நான் அங்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

பின்னர் ரோகித் சர்மாவிடம் பேச விருப்பம் என ஒரு நிர்வாக ஊழியரிடம் கூறினேன். அவர் ரோகித் சர்மாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரியாது. உடனே அவர் சென்று ரோகித் சர்மாவிடம் நான் சொன்னதை கூறிவிட்டார். பின்னர் ரோகித் சர்மா எனது அறைக்கு போன் செய்து என்னுடைய அறைக்கு வாருங்கள் என்று அழைத்தார்.

இதையும் படிங்க : கழற்றி விட கம்பீர் காத்திருக்காரு.. சீக்கிரம் அதை கண்டுபிடிங்க விராட் கோலி.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை

அதன் பின்னர் நான் ரோகித் சர்மாவின் அறைக்கு செல்ல அவரோ என்னிடம் சகஜமாக ஒன்றரை மணி நேரம் பேசினார். பின்னர் அவருடன் இணைந்து உணவு சாப்பிட்டேன். முதல் முறையாக ஒரு ஜாம்பவானுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல ரோகித் சர்மா எனக்கு ஆதரவாக துணை நின்றார் என்று திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement