ஆல் ரவுண்டராக அசத்திய திலக் வர்மா முக்கிய சாதனை.. கிங் கோலியின் 8 வருட தனித்துவ சாதனையும் சமன்

Tilak Varma
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 உலகக் கோப்பை விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தேர்வு பெற்றது. ஹங்கொழு நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு எதிராக திணறிய வங்கதேசம் 20 ஓவர்களில் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாகிர் அலி 24* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 97 என்று சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

திலக்கின் சாதனை:
ஆனால் அடுத்து வந்த திலக் வர்மா அதற்கும் சேர்த்து வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கி விரைவாக ரன்களை சேர்த்து 2 பவுண்டரி 6 சிக்சருடன் 55* (26) ரன்கள் குவித்தார். அவருடன் மறுபுறம் நிதானம் கலந்த அதிரடி காட்டிய மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (26) ரன்கள் எடுத்ததால் 9.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா 97/1 எளிதான வெற்றி பெற்றது.

அதன் காரணமாக வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த இந்தியா நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தங்க பதக்கத்திற்காக விளையாட உள்ளது. முன்னதாக இந்த நாக் அவுட் போட்டியில் பந்து வீச்சில் 2 ஓவர்களை வீசி வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்த திலக் வர்மா 1 விக்கெட் எடுத்து அசத்தினார். அதே போல பேட்டிங்கிலும் அதிரடியாக 55* ரன்கள் எடுத்த அவர் ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு நாக் அவுட் போட்டியில் குறைந்தது 50+ ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2016 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலி இதே சாதனையை முதல் முறையாக படைத்ததை மறக்க முடியாது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு நாக் அவுட் போட்டியில் இளம் வயதில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: என் உடம்பில் வரைந்திருப்பது அவங்க 2 பேர் தான்.. திலக் வர்மாவின் பேச்சால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

சொல்லப்போனால் கடந்த போட்டியில் நேபாளுக்கு எதிராக ஜெய்ஸ்வால் 21 வருடம் 279 நாட்களில் படைத்த அந்த சாதனையை தற்போது 20 வருடம் 332 நாட்களில் திலக் வர்மா உடைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதுக்குள் 2 அரை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா 20 வயதுக்குள் ஒரு அரை சதம் மட்டும் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement