- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே 3 துறையிலும் அசத்திய திலக் வர்மா – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரராக இடம் பெற்றுள்ளார். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் போது அடி வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் இந்த டி20 உலககோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது.

கம்பேக் போட்டியில் 3 துறையிலும் அசத்திய திலக் வர்மா :

ஆனாலும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர் பயிற்சியையும், சிகிச்சையையும் மேற்கொண்ட வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முற்றிலுமாக தவறவிட்டார். அதன் காரணமாக அவரால் சரியான நேரத்தில் இந்திய அணியுடன் இணைய முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பரிந்துரையின் படி முழு உடற்தகுதியை எட்டிய திலக் வர்மா நேற்று அமெரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்தார். இந்த பயிற்சி போட்டியில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 24 பந்துகளை சந்தித்த திலக் வர்மா 38 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அசத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு பெரிய சிக்ஸர்களை அவர் விளாசியிருந்தார். அதோடு வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதுமட்டும் இன்றி எந்த ஒரு வலியும் இல்லாமல் களத்தில் அவர் பீல்டிங் செய்தார். அதோடு ஒரு கேட்ச் பிடித்தது மட்டும் இன்றி பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் நின்ன அதே இடத்தில் தான் இப்போ சஞ்சு சாம்சன் நிக்குறாரு – ராபின் உத்தப்பா ஆதரவு

இப்படி இந்திய அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா அடுத்ததாக மற்றொரு பயிற்சி போட்டியிலும் விளையாட இருக்கிறார். இதனால் தற்போது முழு பிட்டாக இருக்கும் அவர் நிச்சயம் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலிருந்தே பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

- Advertisement -