இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரினை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சனின் ஆட்டம் மிக மோசமான ஒன்றாக அமைந்திருந்தது. குறிப்பாக இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் 40 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
சஞ்சு சாம்சனின் பேட்டிங் பார்ம் குறித்து : ராபின் உத்தப்பா பேச்சு
ஆனாலும் திருவனந்தபுரம் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சொந்த மாநிலத்தில் நடைபெறும் போட்டி என்பதனால் அவர் மீண்டும் பார்மிற்கு வருவார் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி நடைபெற்ற கடைசி போட்டியிலும் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5 போட்டிகளில் வெறும் 46 ரன்களை மட்டுமே சஞ்சு சாம்சன் குவித்திருந்தார். அதனால் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் அவரது இடம் இஷான் கிஷனுக்கு செல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது சஞ்சு சாம்சன் ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என ராபின் உத்தப்பா அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கும் இதேபோன்று நடந்துள்ளது. அது மட்டும் இல்லை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட சமீப காலமாக பார்ம் அவுட்டில் தான் இருந்தார். ஆனால் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததும் மீண்டும் பார்மிற்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இல்ல.. டி20 உலககோப்பை தொடரின் தொடர் நாயகன் இவர்தான் – யுஸ்வேந்திர சாஹல் கணிப்பு
அதேபோன்ற நிலைமையில் தான் தற்போது சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவருக்கு இந்த தொடர் சரியாக செல்லவில்லை என்றாலும் நிச்சயம் ஒரு போட்டியில் அவர் மீண்டும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடுவார் என ராபின் உத்தப்பா அவருக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



