அபிஷேக் சர்மா இல்ல.. டி20 உலககோப்பை தொடரின் தொடர் நாயகன் இவர்தான் – யுஸ்வேந்திர சாஹல் கணிப்பு

Yuzvendra Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 10-ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

டி20 உலககோப்பை தொடரின் தொடர்நாயகன் இவர்தான் : யுஸ்வேந்திர சாஹல் கணிப்பு

இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்றும் நிச்சயம் 2024 உலகக்கோப்பை தொடரை போன்று இந்த தொடரிலும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்லப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கணிப்பினை இந்திய அணியின் அனுபவ வீரரான யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா தான் தொடர் நாயகன் விருதினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் பேசி வரும் வேளையில் இவர் ஜஸ்ப்ரீத் பும்ராவை தொடர் நாயகன் விருதினை வெல்வார் என்று கணித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : 2024 டி20 உலக கோப்பை தொடரில் வெறும் 4 ரன்கள் எக்கானமியுடன் 15 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை தொடரில் அதிக மதிப்புடைய வீரராக இந்த இந்திய வீரர் தான் இருப்பார் – ஆகாஷ் சோப்ரா

அதேபோன்று இம்முறையும் அவர் தனது பந்துவீச்சில் அசத்துவார் என்றும் கூறியுள்ளார். அதோடு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுழற்பந்து வீச்சுக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்றும் தனது கணிப்பினை யுஸ்வேந்திர சாஹல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement