2026 டி20 உலககோப்பை தொடரில் அதிக மதிப்புடைய வீரராக இந்த இந்திய வீரர் தான் இருப்பார் – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருந்த வேளையில் அடுத்ததாக சொந்த மண்ணில் இந்திய அணி 2026 டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறது.

டி20 உலககோப்பை தொடரில் அசத்தப்போகும் இந்திய வீரர் : ஆகாஷ் சோப்ரா

சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலககோப்பை என்பதனால் நிச்சயம் இம்முறையும் இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. அதோடு இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியும் பலம் வாய்ந்த அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணாமாக நிச்சயம் சொந்த மண்ணில் வெற்றி நடைபோட்டு கோப்பையை கைப்பற்றும் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப்போகும் வீரர்கள் யார்? என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி பேசிவரும் பலர் பெரும்பாலும் பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அசத்துவார் என்றும் பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி அசத்துவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் அதிக மதிப்புமிக்க வீரராக திகழப்போவது ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தான் என்று தனது கணிப்பினை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் மற்ற வீரர்கள் எல்லாம் ஒரு துறையில் மட்டுமே அசத்தக்கூடியவர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை பயிற்சியில் ஆட்டத்தில் கலக்கிய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் – விவரம் இதோ

ஆனால் ஹார்டிக் பாண்டியாவை பொறுத்தவரை பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டுவதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவரால் மிகச் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் இதன் காரணமாகவே ஹார்டிக் பாண்டியாவை அவர் அதிக மதிப்பு மிக்க வீரராக குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பாண்டியாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தால் டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement