இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
பயிற்சி போட்டியில் அசத்திய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் :
ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை தெளிவாக அறிவிக்கப்பட்டு இருந்த வேளையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி இந்தியா வந்துள்ள அமெரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆயுஷ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி பங்கேற்று விளையாடியது.
அப்படி நேவி மும்பை மைதானத்தில் நடைபெற்ற அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்தியா ஏ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 238 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான தமிழகத்தை சேர்ந்த நாராயணன் ஜெகதீசன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அமெரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் 55 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 104 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழக அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்தர போட்டிகளில் விளையாட வரும் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க : அல்சாரி ஜோசப்பை தாண்டி மோசமான சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ
இந்திய அணிக்காக முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இருந்து வரும் வேளையில் அவர்களுக்கு அடுத்து நல்ல ஒரு அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நாராயணன் ஜெகதீசன் தொடர்ந்து நீடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



