இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 103 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 63 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய மோசமான சாதனை :
பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை குவித்ததால் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அந்த போட்டியில் இந்திய அணி சார்பாக 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 51 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இப்படி இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கட்டுகளை எடுத்திருந்தாலும் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு மோசமான சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய அந்த மோசமான சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்திருந்தாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அல்சாரி ஜோசப்பை பின்னுக்கு தள்ளி அர்ஷ்தீப் சிங் அந்த மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : என் கண்ணு முன்னே அதை பார்த்தேன்.. ஆடவர் ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது குறித்து – ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி
கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் 40 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இவ்வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் அந்த மோசமான சாதனையில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.



