என் கண்ணு முன்னே அதை பார்த்தேன்.. ஆடவர் ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது குறித்து – ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி

Smriti Mandhana
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக ஆர்.சி.பி அணி இருந்து வருகிறது. கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்ற அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இருந்து வந்தது.

ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது குறித்து பேசிய : ஸ்மிருதி மந்தனா

இந்நிலையில் 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் இருந்த ஆர்.சி.பி அணி 18 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றது பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆடவர் ஆர்.சி.பி அணி 2025 ஐ.பி.எல் கோப்பையை வென்ற போது மைதானத்தில் இருந்த தருணம் குறித்து மகளிர் ஆர்.சி.பி அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனா சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சரியாக 18-வது ஆண்டில் ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றியது. நான் அந்த இறுதி போட்டியின் போது மைதானத்தில் தான் இருந்தேன். வீரர்கள் அனைவரும் கொண்டாடியதை பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 பேர் கிட்டயும் நான் நேத்துதான் பேசுனேன்.. வாஷிங்டன் சுந்தரின் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய – சூரியகுமார் யாதவ்

ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தினரை எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை கண்டேன். 18 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு ஒரு கோப்பையை வென்றதை நான் என் கண் முன்னே பார்த்தது ஒரு அற்புதமான உணர்வு. ஆர்.சி.பி அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என ஸ்மிருதி மந்தனா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement