2 பேர் கிட்டயும் நான் நேத்துதான் பேசுனேன்.. வாஷிங்டன் சுந்தரின் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய – சூரியகுமார் யாதவ்

SKY and Washington Sundar
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இந்த தொடரில் அவர் சரியான நேரத்திற்குள் அணியில் இணைவாரா? என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

வாஷிங்டன் சுந்தர் குறித்து பேசிய : சூரியகுமார் யாதவ்

ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவர் காயமடைந்தார். இதன் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய அவர் பெங்களூரு நகரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்திற்கு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் சரியான நேரத்தில் உலகக் கோப்பை அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்த வேளையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அவர் உலகக் கோப்பை இந்திய அணியுடன் இணைவார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். நேற்று அவரிடம் நான் பேசிய போது அவர் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சி ஆகியவற்றை துவங்கி விட்டதாக கூறியுள்ளார். எனவே நிச்சயம் அவர் வெகு விரைவாக எங்களது அணியுடன் இணைவார் என சூரியகுமார் யாதவ் கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : திலக் வர்மாவின் காயம் குறித்த பெரிய அப்டேட்டை வெளிப்படுத்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

மேலும் திலக் வர்மா குறித்து பேசிய அவர் : திலக் வர்மா தற்போது முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் என்றும் அவர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார் என்றும் உறுதி செய்துள்ளார். இதனால் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சரியான நேரத்திற்குள் இந்திய அணியுடன் இணைவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement