திலக் வர்மாவின் காயம் குறித்த பெரிய அப்டேட்டை வெளிப்படுத்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY and Tilak Varma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா டி20 போட்டிகளில் பொருத்தவரை இந்திய அணியின் டாப் ஆர்டரில் நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். இதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் நட்சத்திர வீரராக அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திலக் வர்மாவின் ரிட்டர்ன் குறித்து பேசிய : சூரியகுமார் யாதவ்

ஆனால் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சையையும் மேற்கொண்டார். அதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டார்.

- Advertisement -

எனவே அவர் டி20 உலக கோப்பை தொடருக்குள் சரியான நேரத்தில் அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் திலக் வர்மாவின் பிட்னஸ் குறித்து தற்போது ஒரு முக்கிய அப்டேட்டை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

திலக் வருமா தற்போது நல்ல முறையில் தயாராகி வருகிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார் என்று கேள்விப்பட்டேன். நேற்று கூட திலக் வர்மாவிடம் நான் பேசியிருந்தேன். அப்போது அவர் பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் என அனைத்தையுமே பயிற்சி செய்து வருவதாகவும் விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று கூறியதாகவும் சூரியகுமார் யாராவது தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் சஞ்சு சாம்சனின் விளையாட வாய்ப்பில்லை.. நேரடியாக கூறிய – சுனில் கவாஸ்கர்

அப்படி திலக் வர்மா இந்திய அணியுடன் இணையும் பட்சத்தில் அந்த இரண்டு போட்டிகள் போதுமென்றும் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. ஐ.சி.சி-யின் 10 ஆவது டி20 உலககோப்பை தொடரானது பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement