டி20 உலககோப்பை தொடரில் சஞ்சு சாம்சனின் விளையாட வாய்ப்பில்லை.. நேரடியாக கூறிய – சுனில் கவாஸ்கர்

Gavaskar and Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களம் காண்கிறது.

சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் : சுனில் கவாஸ்கர்

மேலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான பலமான இந்திய அணி நிச்சயம் இம்முறையும் டி20 உலக கோப்பையசி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக யார் விளையாட போகிறார்கள்? என்கிற கேள்வி அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் சஞ்சு சாம்சனின் பார்ம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இஷான் கிஷன் அசத்தியுள்ளதால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு இஷான் கிஷன் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது :

தேர்வுக்குழுவினர் நிச்சயம் அமைதியாக இருக்கப்போவதில்லை. சஞ்சு சாம்சனுக்கு ஏற்கனவே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவர் தற்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திலக் வர்மா அணிக்குள் வரும் பட்சத்தில் நேரடியாக அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். அதேவேளையில் தற்போது சஞ்சு சாம்சனின் இடம்தான் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனெனில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அவரைத்தான் அணியில் எடுக்க விரும்புவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அதிரடில மிரட்டுறாரு ஓகே தான்.. ஆனா இதுவும் நடக்கும்.. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து – ரஹானே கருத்து

அதனால் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருக்க வாய்ப்பில்லை என்று எனக்கு தோன்றுகிறது. சஞ்சு சாம்சன் கடந்த காலங்களில் தனது திறனை நிரூபித்து இருந்தாலும் தற்போதைய ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. அதனால் நிச்சயம் பிப்ரவரி ஏழாம் தேதி துவங்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்று தோன்றுவதாக சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement