அதிரடில மிரட்டுறாரு ஓகே தான்.. ஆனா இதுவும் நடக்கும்.. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து – ரஹானே கருத்து

Rahane and Abhishek
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற காத்திருக்கிறது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று கோப்பைக்காக போட்டியிட காத்திருக்கின்றனர்.

அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய : முகமது கைப் கருத்து

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி பலமாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் அபிஷேக் சர்மா அதிரடியில் வெளுத்து வாங்குவார் என்றும் இந்த தொடரில் அதிக ரன்களை குவிக்க போவதும் அவர்தான் என்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே அபிஷேக் சர்மாவை எச்சரிக்கும் விதமாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் விளையாடும் ஆட்டம் அதிக ரிஸ்க்கான ஆட்டம்.

எனவே முடிவுகள் எந்த நேரத்திலும் மாறுபடலாம். நியூசிலாந்து அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடியுள்ளார். ஆனால் அதேபோன்று தொடர்ச்சியாக அவரால் விளையாட முடியும் என்று கூற முடியாது. முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த அளவிற்கு அவர் ரிஸ்க்கான ஒரு ஆட்டத்தை விளையாடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியிடம் வாங்கிய ஜெர்சியை நான் அங்கு பிரேம் பண்ணி வைப்பேன் – டேரல் மிட்சல் கருத்து

ஒருவேளை அவருக்கு பந்து பேட்டில் பட்டு ரன்கள் வந்தால் நிச்சயம் அவர் மேட்ச் வின்னர் தான். ஆனால் அதே வேளையில் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தால் அதற்கும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே இந்த உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளதாகவும் அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement