விராட் கோலியிடம் வாங்கிய ஜெர்சியை நான் அங்கு பிரேம் பண்ணி வைப்பேன் – டேரல் மிட்சல் கருத்து

Daryl Mitchell
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. இந்த சுற்றுப்பயத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

விராட் கோலியின் ஜெர்சி அங்கு இருக்கும் : டேரல் மிட்சல்

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த இரண்டு தொடர்களிலுமே நியூசிலாந்து அணியின் சார்பாக விளையாடியிருந்த நட்சத்திர வீரரான டேரல் மிட்சலின் செயல்பாடு மிகவும் திருப்திவாரமாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடர் முடிவடையும் போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியிடம் அவரது ஜெர்சி ஒன்றினை பரிசாக கேட்டு பெற்றிருந்தார். அப்படி தான் ஏன் விராட் கோலியிடமிருந்து அந்த ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொண்டேன்? என்றும் அதை எங்கு வைக்கப்போகிறேன்? என்பது குறித்தும் டேரல் மிட்சல் சில வெளிப்படையான கருத்துக்களை பேசியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலியின் கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை நிச்சயமாக நான் நியூசிலாந்தில் உள்ள என்னுடைய சொந்த அலுவலகத்தில் பிரேம் செய்து வைப்பேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி தனது நாட்டிற்காக பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்கப்போவது இந்த இந்திய வீரர் தான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

அவரைப் போன்று மிகவும் அர்ப்பணிப்புடன் விளையாடும் வீரருக்கு என்னிடம் பெரிய மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாகவே நான் உயர்ந்து பார்க்கும் வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து ஜெர்சியை பரிசாக பெற்றேன் என டேரல் மிட்சல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement