டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்கப்போவது இந்த இந்திய வீரர் தான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

Ricky Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 10 ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.

அதிக ரன்களை அடிக்கப்போவது இவர்தான் : ரிக்கி பாண்டிங் கணிப்பு

இவ்வேளையில் சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடர் என்பதினால் நிச்சயம் இம்முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தக்கவைக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகளவு ரன்களை குவிப்பார்? என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்தினை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியை சேர்ந்த அபிஷேக் சர்மா தான் டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிப்பார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் ஷர்மா ஒரு அற்புதமான வீரர். அவரிடம் இருக்கும் திறமைக்கு நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரே அதிக ரன்கள் அடிப்பார் என்று கருதுகிறேன். அந்த அளவிற்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் முக்கிய சாதனையை தகர்த்த பாபர் அசாம் – விவரம் இதோ

அதோடு போட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடும் அவர் பவுண்டரிகளை அடிக்க தொடங்கிவிட்டால் அவரை தடுக்க முடியாது. அதோடு அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என்றும் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement