கழட்டிவிடப்பட்ட டெல்லி வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்! பெரிய தொகைக்கு கேப்டனாக அழைக்கும் 3 அணிகள் – யார் அவர்?

Iyer
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து விதமான வேளைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்ய சிறிய அளவில் அல்லாத மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

Auction

தக்க வைக்கபட்ட வீரர்கள்:
இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக இந்த தொடரில் ஏற்கனவே விளையாடி வரும் மும்பை, சென்னை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் ரோஹித் சர்மா, தோனி உள்ளிட்ட தாங்கள் விரும்பிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டு அவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தாங்கள் விரும்பும் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளுக்கு ஐபிஎல் நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது.

- Advertisement -

கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயஸ்:
இந்த சீசனில் ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் முக்கிய வீரராக வலம் வந்த ஸ்ரேயஸ் அய்யரை கழட்டி விட்டுள்ளது. இத்தனைக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அவர் அந்த சீசனிலையே பிளே – ஆப் சுற்று வரை அழைத்துச் சென்றார்.

iyer

அதன்பின் நடந்த ஐபிஎல் 2020 சீசனில் ஒருபடி மேலே சென்று இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று அசத்தினார். ஆனால் ஐபிஎல் 2021 தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் டெல்லியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். ஆனால் துபாயில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் 2வது பகுதியில் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய அவருக்கு கேப்டன் பதவியை டெல்லி நிர்வாகம் மீண்டும் கொடுக்காததால் சாதாரண வீரராக விளையாடினார்.

- Advertisement -

அடித்த அதிருஷ்டம்:
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் தக்கவைக்காமல் கழட்டிவிட்டு உள்ளதால் ஷ்ரேயஸ் ஐயருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டி உள்ளது. ஆம் ஐபிஎல் 2022 தொடரில் கேப்டனாக இவரைத் தேர்வு செய்ய பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் போட்டியிட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

iyer 1

இதற்கு காரணம் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி சமீபத்தில் விலகிய காரணத்தால் அந்த அணியின் கேப்டன் பதவி காலியாக உள்ளது. எனவே ஏற்கனவே கேப்டன்ஷிப் பற்றிய அனுபவம் கொண்டதுடன் இளம் வீரராக இருக்கும் ஷ்ரேயஸ் அய்யரை எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுத்து தங்கள் அணிக்கு கேப்டனாக விளையாட வைக்க பெங்களூர் அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொல்கத்தா, பஞ்சாப்:
அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கடந்த சீசனில் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் ஆகியோரை தக்கவைக்க வில்லை. எனவே அவர்களும் இவரை பல கோடி ரூபாய்கள் கொடுத்து தங்கள் அணிக்கு கேப்டனாக விளையாட வைக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

Iyer-1

இது மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கேஎல் ராகுல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற ஒரு கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட இளம் வீரர் தங்கள் அணிக்கு கேப்டனாக செயல்பட்டால் தங்கள் அணியின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என விரும்புகிறது.

- Advertisement -

மும்முனை போட்டி :
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இதன் காரணமாக இவரை விலைக்கு வாங்க பெங்களூரு கொல்கத்தா, மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2 ஆவது டி20 : பரபரப்பான கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செய்த சம்பவம் – ஆனாலும் பாவங்க

எது எப்படியானாலும் வருகின்ற ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் ஏதோ ஒரு அணியின் கேப்டனாக மிகப்பெரிய தொகைக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement