2 ஆவது டி20 : பரபரப்பான கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செய்த சம்பவம் – ஆனாலும் பாவங்க

Akeal-1
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை வெறும் 103 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து இந்த தொடரின் 2-வது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்கியது.

wi

- Advertisement -

இங்கிலாந்து 171 ரன்கள்:
இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் டாம் பாண்டன் 25 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வந்த மற்றொரு ஓபனிங் வீரர் ஜேசன் ராய் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டரில் சாம் பில்லிங்ஸ் 5 ரன்கள், கேப்டன் மோர்கன் 13 ரன்கள் என முக்கிய வீரர்கள் சொதப்பினாலும் மொயின் அலி 24 பந்துகளில் 31 ரன்களும் கிறிஸ் ஜோர்டான் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 171/8 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் பேபின் ஆலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Shepherd

மிரட்டல் சேசிங்:
இதை அடுத்து 172 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் பிரெண்டன் கிங் டக் அவுட்டாக ஷாய் ஹோப் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 24 ரன்களும் டேரன் ப்ராவோ 23 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட் ஆனார்கள். அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவருமே தலா 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார்கள்.

- Advertisement -

திக் திக் போட்டி:
இதனால் 57/6 என அந்த அணி தடுமாறியபோது களமிறங்கிய ரொமோரியா செபார்ட் அதிரடியாக பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீசை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க முயன்றார். இவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய அகில் ஹொசைன் தன் பங்கிற்கு விடாமுயற்சியுடன் பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

akeal 2

எளிதாக தோற்று விடும் என எதிர்பார்த்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர்களைக் சக்கிப் மஹ்மூத் வீச அதை அகில் ஹொசைன் எதிர்கொண்டார்.

- Advertisement -

1 ரன்னில் தோல்வி:
வைடாக வீசப்பட்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத ஹொசைன் 2, 3வது பந்துகளில் பவுண்டரிகள் பறக்கவிட்டார். 4வது பந்தில் மீண்டும் ஒய்ட் வாயிலாக 2 ரன்கள் கிடைக்க கடைசி 3 பந்துகளை மீண்டும் எதிர்கொண்ட அகில் ஹொசைன் அந்த 3 பந்துகளிலும் 3 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

akeal

ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் 170/8 ரன்களை மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. அகில் ஹொசைன் 44* (16) ரன்கள், ரொமேரியோ செபார்ட் 44* (28) ரன்கள் வீணானது. இந்த போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 1* என தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் மற்றும் 31 ரன்கள் எடுத்த மொய்ன் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க : இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவை பாகிஸ்தான் ஈஸியா தோக்கடிக்கும் – பாக் வீரர் சவால்

வெஸ்ட்இண்டீஸ் மோசமான சாதனை:
இந்த போட்டியில் வெறும் 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1 ரன் வித்தியாசத்தில் அதிக முறை தோல்வியடைந்த அணி (3 முறை) என்ற பரிதாப சாதனையை படைத்தது. இதைத் தொடர்ந்து இந்த தொடரின் 3வது டி20 போட்டி வரும் ஜனவரி 27-ஆம் தேதி காலை 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement