இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவை பாகிஸ்தான் ஈஸியா தோக்கடிக்கும் – பாக் வீரர் சவால்

INDvsPAK
- Advertisement -

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. வரும் அக்டோபர் 16 முதல் துவங்க உள்ள இந்த உலகக்கோப்பை வரும் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி,மெல்பர்ன், அடிலெய்ட் போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெற உள்ளது.

pak

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் மோதல்:
ரோஹித் சர்மா தலைமையில் முதல் முறையாக இந்திய அணி விளையாட உள்ள இந்த உலக கோப்பையில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் இந்தியாவுடன் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதை அடுத்து இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

Shaheen-afridi

மீண்டும் தோற்கடிப்போம்:
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள இப்போட்டி தற்போது முதலே இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலக கோப்பை போட்டியில் இந்தியாவை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் 2021 போலவே இந்த வருடமும் இந்தியாவை எளிதாக தோற்கடிப்போம் என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shaheen-afridi-1

ரொம்ப ஈஸி:
இதுபற்றி இன்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “நாங்கள் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்போம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணியாகும். இந்த 2 அணிகளும் மோதும் போது இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்கள்தான் தேவையில்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது என்பது சாதாரண ஒன்றாகும்”
என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 2021ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் விராட் கோலி தலைமையில் இந்தியா பரிதாப தோல்வி அடைந்ததுடன் அரையிறுதி சுற்றுக்கு கூட செல்லமுடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

Akhtar

டி20 – தடுமாறும் இந்தியா:
அத்துடன் என்னதான் ஐபிஎல் தொடரால் பல தரமான வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் சர்வதேச டி20 கிரிக்கெட் என வரும் போது பாகிஸ்தானை விட இந்திய அணி பலவீனமாகவே உள்ளது. அதன் காரணமாக கடந்த வருடம் இந்தியா படுதோல்வியை சந்தித்த போது பல ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே வேதனையை தெரிவித்தார்கள்.

இதையும் படிங்க : IPL 2022 : ஐ.பி.எல் தொடரிலிருந்து அதிரடியாக வெளியேறிய சி.எஸ்.கே வீரர் சாம் கரண் – காரணம் இதுதான்

அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான கனவு டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பிடிக்கவில்லை. அதேசமயம் அந்த டி20 அணிக்கு பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement