IPL 2022 : ஐ.பி.எல் தொடரிலிருந்து அதிரடியாக வெளியேறிய சி.எஸ்.கே வீரர் சாம் கரண் – காரணம் இதுதான்

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது 15வது ஐபிஎல் தொடருக்கான இறுதி கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த இந்த ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு 10 அணிகளுடன் போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்த தொடருக்கு முன்னதாக பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயர்களை ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.

அந்த மெகா ஏலத்திற்குப் பின்னர் இந்த ஐபிஎல் தொடரின் முறையான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்று மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. அதோடு இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பலர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த இளம் இங்கிலாந்து வீரர் சாம் கரன் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரினை ரிஜிஸ்டர் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்ட வேளையில் சாம் கரண் நிச்சயமாக சிஎஸ்கே அணியால் ஏலத்தில் மீண்டும் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான அவர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதனால் சென்னை அணியின் முக்கிய வீரராக அணிக்கு தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ள அவர் அதற்கான காரணத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்காதது உண்மையில் எனக்கு வருத்தம்தான். ஆனாலும் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள நான் மீண்டும் வலைப்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வரவேண்டும் என்பதன் காரணமாகவே தற்போது நான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளேன்.

- Advertisement -

மேலும் காயத்தில் இருந்து விடுபட்ட நான் என்னுடைய ஆட்டத்திலும் கவனத்தை செலுத்த வேண்டும். அதோடு இந்த இடைவெளியில் எனது உடற்தகுதியும் நான் மேம்படுத்த வேண்டும். எனவே இதன் அடிப்படையில் தான் நான் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விரைவில் மீண்டும் என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவேன் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அவர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பான பங்களிப்பை அளித்த சாம் கரன் நிச்சயம் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement