
ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையுடன் (மே 27) முடிவடைந்தது. அன்று நடந்த போட்டியில் ஹைத்ராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக காய் பற்றியது சென்னை அணி. இந்த தொடரில் தொடர்ந்து 3 வது முறையாக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார் கரண் ஷர்மா.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த தொடரில் 8 அணிகள் பங்குபெற்று 60 போட்டிகளில் விளையாடியாது. கடந்த ஞாயிற்று கிழமை இந்த தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய வேக பந்து வீச்சாளர் கரண் ஷர்மா 3 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். மேலும் இந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடி 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்தார். அப்போது நடைபெற்ற இறுதி போட்டியில் புனே அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது மும்பை அணி . அதே போல 2016 ஆம் நடைபெற்ற தொடரில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது இறுதி போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஹைதராபாத் அணி.
கடந்த ஞாயிற்று கிழமை (மே 27 ) ஐ.பி.எல் பட்டதை வென்ற சென்னை அணியில் இடம் பெற்றதன் மூலம், இதுவரை நடந்து முடிந்த கடைசி மூன்று ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணியில் தொடர்ந்து 3 முறை இடம்பிடித்துள்ள ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கரண் ஷர்மா.