அந்த சிக்ஸர்கள் 2011 உ.கோ பைனலில் தோனி அடித்ததற்கு சமம் – விராட் கோலி ஆட்டம் பற்றி ஜாம்பவான் கருத்து

MS Dhoni Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித், ராகுல், சூர்யகுமார் யாதவ் என 3 முக்கிய பேட்ஸ்மென்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

அதனால் 31/4 என மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை விராட் கோலியுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் பினிஷிங் செய்யாமல் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆனதால் ஏற்பட்ட பரபரப்பில் பதற்றமடையாமல் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

தோனிக்கு நிகர்:
இந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற அப்போட்டியில் கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவை 2வது ஓவரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி வரலாற்றில் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்தார்.

அதிலும் 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் அவர் அடித்த 2 சிக்சர்கள் தான் வெற்றியை உறுதி செய்தது. குறிப்பாக பவுன்ஸ் ஆகி வந்த 5வது பந்தில் அசால்டாக பின்னங்காலில் நின்று நேராக பறக்க விட்ட சிக்சர் அவர் பழைய பார்முக்கு திரும்பி விட்டார் என்பதையும் இந்த உலகிற்கு பறைசாற்றியது. அந்த சமயத்தில் மட்டும் அந்த சிக்ஸர்களை அவர் அடிக்காமல் போயிருந்தால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்களுக்கு பதில் 28 ரன்கள் தேவைப்பட்டிடுக்கும். அதனால் அவராலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியாது.

- Advertisement -

அதனால் அந்த சிக்ஸர்களை எதிர்ப்புறம் விளையாடிய ஹர்திக் பாண்டியா உட்பட ஏராளமானவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் 2011 உலகக் கோப்பை பைனலில் கோப்பையை வெல்ல தோனி அடித்த யாராலும் மறக்க முடியாத சிக்சருக்கு நிகராக இப்போட்டியில் விராட் கோலி சிக்ஸர் அடித்ததாக பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Kapil-Dev

“அந்த போட்டியில் மிகவும் முக்கியமான நேரத்தில் அந்த 2 சிக்சர்கள் வந்தது. இப்போது நினைத்தால் கூட அதை எப்படி விராட் கோலி அடித்தார் என்று எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி நேரத்தில் தோனி அடித்த அந்த சிக்ஸரின் வீடியோவை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அதைத்தொடர்ந்து விராட் கோலி அடித்த இந்த 2 சிக்சர்களை தான் நான் அதிக முறை பார்த்துள்ளேன். இப்போது வரை அது என்னால் மறக்க முடியவில்லை. அந்த இக்கட்டான போட்டியில் விராட் கோலியின் அனுபவமே அவருக்கு கைகொடுத்தது என்று தான் கூற வேண்டும்”

“மேலும் இப்படி ஒரு அழுத்தம் நிறைந்த சூழலில் இளம் வீரர்களால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பது கடினம் என்று நினைக்கிறேன்” என கூறினார். முன்னதாக 2019க்குப் பின் சதமடிக்கவில்லை என்பதற்காக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் அணியில் காலத்தை தள்ளூவீர்கள் என்று விமர்சித்த இதே கபில் தேவ் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே தாமாக வந்து பாராட்டும் அளவுக்கு விராட் கோலி பிரம்மாண்ட இன்னிங்சை விளையாடி உள்ளார் என்பதே அவருடைய தரத்திற்கு சான்றாகும்.

Advertisement