2024 டி20 உலகக் கோப்பையை அந்த அணி ஸ்பெஷலாக ஜெயிப்பாங்க.. திசாரா பெரேரா கணிப்பு

Thisara Perara
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. கடைசியாக தோனி தலைமையில் முதலும் கடைசிமாக 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

ஆனால் அதன் பின் ஐபிஎல் தொடரில் அசத்திய நிறைய வீரர்கள் விளையாடியும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஸ்பெஷல் வெற்றி:
அந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா கோப்பையை கோட்டை விட்டது. அதை விட 2023 உலகக் கோப்பை தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா கண்டிப்பாக 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதனால் 2024 டி20 உலகக் கோப்பையையில் என்ன நடக்குமோ என்ற கலக்கத்துடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று இலங்கை வீரர் திசாரா பெரேரா கணித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது போன்ற ஸ்பெஷல் செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியா கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏதோ ஒரு ஸ்பெஷலை நிகழ்த்தும் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் கடந்த உலக கோப்பையில் அவர்கள் ஃபைனலுக்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடைப் போட்டதை பார்த்தோம்”

இதையும் படிங்க: 2 வேலையையும் கச்சிதமா செய்ற.. அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு.. இளம் வீரரை பாராட்டிய ப்ராட் ஹோக்

“அதே போல இந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர்கள் ஏதேனும் ஸ்பெஷல் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் எப்போதும் முதிர்ச்சியான வீரர்களை விரும்புவேன். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ரோகித் சர்மா மகத்தான வேலையை செய்து வருகிறார். எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக கேப்டன்ஷிப் பதவியில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று கருதுகிறேன். அதனால் ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நான் விரும்புவேன்” என்று கூறினார்.

Advertisement