இந்தியாவில் நடைபெறும் இந்த வருட ஐ.பி.எல் – தேதியை அறிவித்த பி.சி.சி.ஐ – ரசிகர்கள் மகிழ்ச்சி

ipl trophy
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது இந்த 2021 ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் சீசன் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தொடருக்கான 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் சென்னையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற இருப்பதை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

Rohith

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐ.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் ஐ.பி.எல் தொடர் நடைபெற வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ உறுதியாக இருந்தது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மார்ச் மாதம் நிறைவடையும். பின்னர் இந்திய வீரர்கள் அனைவருக்கும் போதிய ஓய்வு அளிக்கப்பட்டு ஏப்ரல் 11ம் தேதி இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் என்றும் ஜூன் 5ஆம் தேதி அல்லது 6ஆம் தேதியில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

Ipl cup

இதுகுறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில் : ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நிச்சயம் இந்தியாவிலேயே போட்டி இந்த ஆண்டு நடைபெறும் என்பதில் உறுதியாக உள்ளோம். இப்போது உள்ள சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவதை விட இந்தியாவில் நடத்துவதே பாதுகாப்பானது என்று அவர் கூறியுள்ளார்.

IPLNSG

எனவே இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையில் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement