இது என்னுடையது..! மைதானத்தில் கத்திய கோலி.! அப்செட் ஆன ரஹானே..!

Kohli

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது.இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) தேதி துவங்கியது.

Ashwin

பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்படி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் குக் 80 ரன்களும், பயிர்ஸ்டோவ் 70 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் இந்திய வீரர் கோலி மற்றும் ரஹானே பீல்ட்டிங்கின் போது சுதப்பி இங்கிலாந்து அணியின் ஜென்னிங்ஸ்ஸின் கேட்சை தவறவிட்டு சொதப்பினர்.

இந்த போட்டியின் இசாந்த் சர்மா வீசிய 6-வது ஓவரின் மூன்றாவது பந்தை இங்கிலாந்து அணியின் ஜென்னிங்ஸ் எதிர்கொண்டார். அப்போது எட்ஜ் ஆகி அது நேராக கோலியின் கைக்கு வந்தது. ஆனால், அவரது அருகில் இருந்த ரஹானே திடீரென்று பாய்ந்து அந்த கேட்சை தவறவிட்டார். அப்போது விராட் கோலி, சற்று கோபத்துடன் ‘இது என்னுடைய கேட்ச்’ என்று ரஹானேவிடம் கத்தியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.

Virat Kholi

இதனால் ஆறாவது ஓவரலேயே ஆட்டமிழக்க வேண்டிய ஜென்னிங்ஸ் 98 பந்துகளை விளையாடி 42 ரன்களை எடுத்திருந்தார். இதனால் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே ஆகி இருப்பார். பொதுவாக ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் தான் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு கேட்ச் பிடிக்க அதிக நேரமும் கிடைக்காது. எனவே, ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஆனால், இந்த போட்டியில் கோலி மற்றும் ரஹானே செய்த இந்த தவறால் ஜென்னிங்ஸ் மூலம் இங்கிலாந்து அணி கூடுதலாக சில ரன்களை சேர்த்துவிட்டது.