கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களின் குழந்தைகள் மக்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறிவிடுகின்றனர். பத்திரகைகளும் மீடியாக்களும் அவர்களை உன்னிப்பாக கவனித்து எப்படியாதவது அவர்களை பற்றிய கிசுகிசுக்களை கண்டுபிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல இந்தி நடிகர் சைப் அலி கானின் மகளை டெல்லி அணியின் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் கவர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா, கொல்கத்தா அணியின் இளம் வீரர் சுபம் கில் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டுள்ளதாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி போட்டியின் போது உரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தற்போது அமீர் கானின் மகள் சாரா அலி கான் டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக கிசுகிசுக்கபடுகிறது.
இந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடி வந்த ரிஷப பண்ட் 14 போட்டிகளில் விளையாடி 684 ரன்களை எடுத்திருந்தார். மேலும் இந்த தொடரில் அதிக பௌண்டரிகள் (68) அடித்த பட்டியலிலும், அதிக சிக்சர்கள் (37) அடித்த பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் சாரா அலி கானும் பல்வேறு இடங்களில் சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா என்று இன்னும் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. இந்தியில் மிக பெரிய நடிகரான சைப் அலிகானின் மகள் இந்த கிசுகிசுவில் சிக்கியுள்ளது கிரிக்கெட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களை திடுக்கிட வைத்துள்ளது.