இந்திய அணிக்கு எதிராக 2 தவறான தீர்ப்புகளை வழங்கிய 3 ஆவது நடுவர். ரசிகர்கள் கொதிப்பு – நடந்தது என்ன ?

Eng
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5வது போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ind

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்த போட்டியில் 3வது அம்பயர் இன் சில செயல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது விக்கெட்டில் 3வது அம்பயர் எடுத்த முடிவு முற்றிலும் தவறானது என ஆதாரத்துடன் சில ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக 3-வது இடத்தில் களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்த நிலையில் பைன் லெக் திசையில் அடித்த பந்து டேவிட் மலான் கைகளுக்கு சென்று அவர் கேட்ச் பிடித்து அவர் ஆட்டமிழந்தார். ஆனால் அந்தப் பந்து ரீபிளேவின் போது தரையில் பட்டது என்று தெளிவாக தெரிந்தும் 3வது அம்பயர் கொடுத்த அந்த அவுட் சர்ச்சையாக வெடித்தது.

malan

மேலும் அது நாட் அவுட் என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று இரண்டாவதாக கடைசி ஓவரின் போது வாஷிங்டன் சுந்தர் அடித்த பந்து சிக்ஸ் லைனிற்கு அருகில் நின்ற அடில் ரஷீத் கைக்கு சென்றது. அந்த பந்தினை பிடிக்கும் போது அவர் கால் பவுண்டரி லைனில் பட்டது கேமராவில் தெளிவாக தெரிந்தும் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அது சிக்ஸர் இல்லை என்றும் அவர் அவுட் என்றும் அறிவிக்கப்பட்டது.

rashid

இந்த இரண்டு முடிவுகளும் தெள்ளத்தெளிவாக இந்திய அணிக்கு எதிராக அமைந்தது. இதனை சரியாக பார்த்த ரசிகர்கள் புகைப்படத்துடன் தங்களது கருத்துக்களை மூன்றாவது அம்பயருக்கு எதிராக வைத்து வருகின்றனர். மேலும் இந்த இரண்டு தீர்ப்புகளும் தவறானது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உங்களது கருத்துக்களை கீழே பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement