முந்தைய கூட்டணி அஷ்வினின வாழ்க்கையை வீணாடிச்சுட்டாங்க, டிராவிட் – ரோஹித்தை பாராட்டும் பாக் ஜாம்பவான்

Dravid-1
- Advertisement -

ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டிக்காக உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இதே மைதானத்தில் மோதிய போது வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையில் தங்களை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் போன்றவை விமர்சனத்தை சந்தித்துள்ள வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Ravichandran Ashwin

- Advertisement -

குறிப்பாக சஹாலை போல் விக்கெட்டுகளை எடுக்காமல் துல்லியமாக மட்டும் பந்துவீசும் தமிழக வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் 2010 முதல் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி தலைமையிலான இந்திய அணியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக அஷ்வின் அசத்தினார். இருப்பினும் கேப்டனாக தோனி விடைபெற்ற 2017க்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணி இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக அவரை புறக்கணித்தது.

மீண்டும் கம்பேக்:
மேலும் குல்தீப் யாதவ் – சஹால் ஆகியோருக்கு அதிக வாய்ப்பளித்த அந்த கூட்டணி ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்ட போதிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மொத்தமாக கழற்றி விட்டது. அதனால் அஷ்வினின் வெள்ளைப் பந்து கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த நிலையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் ஜாம்பவான் தோனி ஓய்வு பெற்றதால் அவரது ஆலோசனைகள் இல்லாமல் தடுமாறிய சஹால் மற்றும் குல்தீப் யாதவ் பார்மை இழந்தனர்.

ashwin

அத்துடன் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி – ரவி சாஸ்திரியின் ஆதிக்கமும் குறைந்ததால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த அஷ்வின் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் யாருமே எதிர்பாராத வகையில் 4 வருடங்கள் கழித்து நேரடியாக தேர்வாகி கம்பேக் கொடுத்தார். அதில் முழுமையாக வாய்ப்பு பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி அதன்பின் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

கேரியரை வீணடிச்சுடாங்க:
அதன்பின் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறிய அவரை மீண்டும் கண்டுகொள்ளாத தேர்வுக்குழு ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுகாக நிறைய போட்டிகளில் ஜோஸ் பட்லருடன் டாப் ஆர்டரில் களமிறங்கி கேரியரில் முதல் முறையாக அரைசதம் அடித்து பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஆல்-ரவுண்டராக அசத்திய போதிலும் பின்னர் நடந்த தென் ஆப்பிரிக்க, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடரில் கண்டுகொள்ளவில்லை. அந்த நிலைமையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்பட்ட அவர் 6.66 என்ற நல்ல எக்கானமியில் பந்து வீசியதால் தற்போது ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ashwin

இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் டி20 உலகக்கோப்பையில் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அஷ்வினின் வாழ்க்கையை முந்தைய கூட்டணி வீணடித்து விட்டதாக ஜாம்பவான் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டக் கூறியுள்ளார். இருப்பினும் புதிதாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அஷ்வினுக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். ஏனெனில் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து ஏன் நீக்கப்பட்டார் என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் அவருடைய நல்ல கேரியர் வருடங்களை வீணடித்து விட்டார்கள். பேட்டிங்கிலும் அசத்துக்கூடிய திறமை பெற்றுள்ள அவர் முழுமையான வீரர். கிரிக்கெட்டில் 2 வகையான பவுலர்கள் உள்ளனர். சிலர் நல்ல எக்கனாமியில் துல்லியமாக பந்து வீசுவார்கள். சிலர் விக்கெட்டுக்கள் எடுப்பதற்கான வலையை விரிப்பார்கள்”

Mushtaq

“ஆனால் அந்த 2 வகையான வேலைகளையும் அஸ்வின் செய்யக்கூடியவர் என்று நான் நினைக்கிறேன். எனவே அவரை நீக்குவது இந்தியாவுக்கும் அவருக்கும் நியாயமற்ற முடிவாகும். ஆனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தான் மீண்டும் அவரை அணிக்குள் கொண்டு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்க சிறந்த முடிவாகும்” என்று கூறினார்.

Advertisement