ஓப்பனிங் வேணாம். ரிஷப் பண்ட் அந்த இடத்தில் களமிறங்கினால் தான் அடிச்சி நொறுக்குவாரு – பாக் வீரர் கருத்து

RIshabh Pant Poor Batting
- Advertisement -

லண்டனில் ஜூலை 12-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை அசால்டாக சேஸிங் செய்து வென்ற இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதனால் அவமானத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அனலாக செயல்பட்டு 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டு பழிதீர்த்துக் கொண்டது.

RIshabh Pant Fans

- Advertisement -

முன்னதாக கடந்த 2018இல் அறிமுகமாகி சமீப காலங்களில் எம்எஸ் தோனியையும் மிஞ்சும் அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ள ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 எனப்படும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மொத்தமாக சொதப்பிய அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற வகையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

ஓப்பனர் பண்ட்:
அந்த நிலையில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் 98/5 என இந்தியா தடுமாறியபோது டி20 இன்னிங்ஸ் போல சரவெடியாக பேட்டிங் செய்த அவர் 146 (111) ரன்கள் குவித்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார். அதனால் பாராட்டுகளை அள்ளிய அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் மிரட்டிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தியத்தை போல் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை இந்திய நிர்வாகம் வழங்க வேண்டும் என இர்பான் பதான், வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Rishabh Pant Ind vs ENg

அந்த கோரிக்கையை யார் கவனித்தார்களோ தெரியவில்லை இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் முதல் முறையாக தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் வாய்ப்பை பெற்று 26 (15) ரன்களை பறக்கவிட்டார். ஆனால் 3-வது போட்டியில் 1 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிசான் போன்ற தொடக்க வீரர்கள் ஏற்கனவே இருப்பதால் இது தற்காலிகமான முடிவு என்றாலும் இந்த முடிவு அணியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷிட் லதீப் கூறியுள்ளார்.

- Advertisement -

செட்டாக மாட்டார்:
வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் தடுமாறி பின்பு தொடக்க வீரர்களாக களமிறங்கி பெரிய அளவில் சாதித்தார்கள். அந்த வகையில் தொடக்க வீரர்களாக களமிறங்கி யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் ரிஷப் பண்ட் இயற்கையாகவே மிடில் ஆர்டரில் மிரட்ட கூடிய ஒரு பேட்ஸ்மேன் என்பதை டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்து வருவதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

latif

“நீங்கள் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக களமிறக்கியது சரிதான் என்றாலும் அவர் லோயர் ஆர்டரில் மிரட்டக்கூடிய ஸ்பெஷலான பேட்ஸ்மேன். யார் வேண்டுமானாலும் தொடக்க வீரராக களமிறங்கலாம். சொல்லப்போனால் ஐசிசி டாப் 10 தரவரிசையில் இருக்கும் 9 வீரர்கள் தொடக்க வீரர்களாகவே இருப்பார்கள். ஆனால் உண்மையான போட்டி மிடில் ஆர்டரில் தான் துவங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் 28 ரன்களை அடித்த ஸ்ரேயாஸ் அய்யரை பாருங்கள், மிடில் ஆர்டரில் அடிக்கும் 30 ரன்கள் டாப் ஆர்டரில் அடிக்கும் பெரிய ரன்களை விட மதிப்பானது.

- Advertisement -

அந்த வகையில் 3-வது போட்டியில் இந்தியா செய்த ஏராளமான மாற்றங்கள் அவர்களுக்கு தோல்வியை பரிசளித்தது. இல்லையேல் அவர்கள் இருக்கும் பார்முக்கு 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றிருப்பார்கள்” “ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றிய நீங்கள் கடைசிவரை எதிரணிக்கு கருணை காட்டி இருக்கக்கூடாது. அதைத்தான் ஆஸ்திரேலியர்கள் செய்வார்கள். அவர்கள் (இந்திய அணி நிர்வாகம்) நிறைய தேவையற்ற மாற்றங்களை செய்து இந்திய அணியைச் சீர்க்குலைக்கிறார்கள்.

இதையும் படிங்க : ரோஹித் கேப்டன் என்பதால் கேள்வி வருவதில்லை, விராட் மீது மட்டும் ஏன் இந்த விமர்சனம் – ஜாம்பவானின் ஆதரவு

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பேக்-அப் வீரர்களை வைத்து விளையாட முயற்சிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவரை மட்டுமே அடிப்படையாக வைத்து 11 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement