ரோஹித் கேப்டன் என்பதால் கேள்வி வருவதில்லை, விராட் மீது மட்டும் ஏன் இந்த விமர்சனம் – ஜாம்பவானின் ஆதரவு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலாவதாக நடந்த டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அபாரமாக செயல்பட்டு 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதி லண்டனில் துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தவித்து வருவதால் இருமடங்கு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

Kohli

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே 70 சதங்களை அடித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என தன்னை நிரூபித்துள்ள அவர் கடந்த 2019க்கு பின்பாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கு மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கிறார். இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அந்தப் பதவிகளிலிருந்து படிப்படியாக விலகி சுதந்திரப் பறவையாக விளையாடி வரும் நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட மோசமாக விளையாடுகிறார்.

ரோஹித்தும் தடுமாற்றம்:
அதனால் சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு அறிவுறுத்திய ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களின் ஆலோசனைகளை பின்பற்றாத அவர் தொடர்ச்சியாக விளையாடினாலும் எந்த முன்னேற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அதனால் பொறுமையிழந்த கபில்தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் காலத்தை கடத்த முடியும் என்ற விமர்சனங்களை வைத்ததுடன் அணியிலிருந்து விராட் கோலியை நீக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Rohith

அதைவிட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 போட்டியில் மட்டும் பங்கேற்ற அவர் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டுள்ளது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில் விராட் கோலியை போலவே புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மாவும் சமீப காலங்களில் 20, 30 ரன்கள் போன்ற நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை அடிக்க முடியாமல் சுமாரான பார்மில் தான் இருந்து வருகிறார். குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக அவரால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

மேலும் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை காயம் மற்றும் ஓய்வு காரணமாக முக்கிய தொடர்களை தவறவிட்ட அவர் பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் 6 போட்டியில் பங்கேற்று விட்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார். இருப்பினும் அவர் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி மீது பாயும் கேள்விக்கணைகளில் பாதியளவு கூட அவர் மீது பாய்வதில்லை.

Rohith-1

என்ன நியாயம்:
இந்நிலையில் விராட் கோலியை போலவே ரோகித் சர்மாவும் ரன்கள் அடிக்க தடுமாறி வருவதாக தெரிவிக்கும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அவரைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை எனக்கூறியுள்ளார். மேலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் என்பது தற்காலிகமானது என தெரிவித்துள்ள அவர் விரைவில் விராட் கோலி பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா ரன்கள் அடிக்காமல் இருக்கும் நிலையில் அதைப்பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்று எனக்கு புரியவில்லை. அவரை போன்ற இதர வீரர்களுக்கும் இது பொருந்தக் கூடியதாக உள்ளது. பொதுவாக பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்று கூறுவார்கள். அதன்படி டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட வேண்டிய அவர்களால் வெற்றியும் காணமுடியும் தோல்வியையும் சந்திக்க முடியும். அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடர் விராட் கோலிக்கு உகந்ததாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் செட்டிலாகி அடிக்க அதிக நேரங்கள் கிடைப்பது போல் ஒருநாள் கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் விளையாட நேரம் கிடைக்கும்” என்று கூறினார்.

gavaskar

நிறைய முன்னாள் வீரர்கள் டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தேர்வு செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அது பற்றி சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் நல்ல தேர்வு குழுவினர் உள்ளனர். மேலும் டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நேரங்கள் உள்ளன.

இதையும் படிங்க : IND vs ENG : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதற்கு முன்பாக ஆசிய கோப்பை உட்பட முக்கிய தொடர்கள் உள்ளன. எனவே அதில் சிறப்பாக செயல்பட்டு பார்மில் உள்ள வீரர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதற்கு முன்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் மீது விமர்சனங்களை திணிக்காதீர்கள்” என்று கூறினார்.

Advertisement