IND vs ENG : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தோடு தற்போது இந்த ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளது. அதே வேளையில் மோர்கனுக்குப் பிறகு தற்போது முழுநேர கேப்டனாக மாறியுள்ள ஜாஸ் பட்லர் முதன்முதலாக ஒருநாள் தொடரை அணுக உள்ளதால் இங்கிலாந்து அணியும் இந்த தொடரை கைப்பற்ற பலமாக போராடும் என்பதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Shreyas Iyer

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக தற்போது இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் உத்தேசமாக கணித்து உள்ளோம்.

அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக அனுபவம் வாய்ந்த துவக்க ஜோடியான ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் இறங்குவது உறுதி. மூன்றாவது இடத்தில் விராத் கோலி காயமடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாட வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், ரிஷப் பண்டும் விளையாடுவார்கள்.

dhawan

அதே போன்று ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாடுவார்கள். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது. (இவை அனைத்துமே உத்தேசமாக கணிக்கப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது). அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவன், 3) விராட் கோலி/இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) முகமது ஷமி, 10) ஷர்துல் தாகூர்/பிரசித் கிருஷ்ணா, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement