IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஜூலை 12 ஆம் தேதி துவங்கவுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் தற்போது நமது அணி அவர்களை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியுள்ளதால் அதே உத்வேகத்துடன் இந்த ஒருநாள் தொடரையும் அணுக உள்ளனர்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

மேலும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இங்கிலாந்து அணியும் தற்போது தங்களது அணியை பலப்படுத்தியுள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்தெந்த நாட்களில் நடைபெறுகிறது? இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்? மற்றும் போட்டியை எந்த தொலைக்காட்சியில் காணலாம் என்பது குறித்த முழு தகவலையும் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஜூலை 12-ஆம் தேதி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது (5.30) மணிக்கு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் ஜூலை 14-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி மாலை ஐந்து முப்பது (5.30) மணிக்கு துவங்குகிறது. ஆனால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை காட்டிலும் மூன்றாவது ஒருநாள் போட்டி இரண்டு மணி நேரங்களுக்கு முன்னதாக அதாவது மூன்று முப்பது (3.30) மணி அளவில் துவங்க உள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 17-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி தொலைக்காட்சி குழுமம் கைப்பற்றி இருப்பதால் சோனி குழும தொலைக்காட்சிகளில் இந்த போட்டியை நேரடியாக கண்டு களிக்கலாம்.

இதையும் படிங்க : IND vs ENG : காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியை தவறவிடும் நட்சத்திர வீரர் – என்னப்பா இப்படி ஆயிடுச்சி?

அதே போன்று OTT-யில் சோனி லைவ் ஆப் மூலம் இந்த தொடரை கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். இன்று துவங்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement