வீடியோ : எங்களுடன் பைனலில் மோதும் அறுகதை உங்களுக்கு இல்லை – தோல்விக்குப்பின் இந்தியா பற்றி சோயப் அக்தர் பேசியது என்ன

Akhtar
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் மாபெரும் லட்சியத்துடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 168/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 27, கேஎல் ராகுல் 5, சூரியகுமார் யாதவ் 14 என துருப்பச்சீட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 50 (40) ரன்களும் ஹர்திக் பாண்டியா 63 (33) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் – கேப்டன் ஜோஸ் பட்லர் ஓப்பனிங் ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 16 ஓவரிலேயே 170/0 ரன்களை விளாசி பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

தகுதியற்ற இந்தியா:
அதனால் வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இங்கிலாந்து தகுதி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் ஓப்பனிங்கில் அதிரடியாக ரன்களை குவிக்க தடுமாறிய இந்தியா பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பியதால் பெட்டி படுக்கையுடன் இந்த உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை இறுதி போட்டியில் தங்களுடன் மோதும் அளவுக்கு அரையிறுதியில் இந்தியா விளையாடவில்லை என்று தெரிவிக்கும் சோயப் அக்தர் அவர்கள் தோற்பதற்கு தகுதியான அணி என்று விமர்சித்துள்ளார்.

ஆரம்பத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்டதால் பாகிஸ்தான் இந்த வாரம் வெளியேறினால் அடுத்த வாரம் இந்தியா வெளியேறும் என்று பேசி ரசிகர்களிடம் கிண்டல்களுக்கு உள்ளான அவர் ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்புவதாக நேற்று முன் தினம் பேசியிருந்தார். ஆனால் அதிர்ஷ்டத்துடன் பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெற்ற மமதையில் தற்போது இந்தியாவை கிண்டலடிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு இது மோசமான தோல்வியாகும். அவர்கள் மோசமாக விளையாடியதால் தோற்பதற்கு தகுதியானவர்கள் என்பதுடன் பைனலுக்கு தகுதி பெற தகுதியற்றவர்கள்”

- Advertisement -

“இந்தியா படுமோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவருடைய மோசமான பந்து வீச்சு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால சூழ்நிலைகள் இந்திய பந்து வீச்சுக்கு உகந்தது என்றாலும் அவர்களிடம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசும் பவுலர் இல்லை. மேலும் சஹாலை அவர்கள் ஏன் எந்த ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அந்த வகையில் இப்போதும் இந்திய அணியின் தேர்வில் எனக்கு குழப்பம் நிலவுகிறது. இன்றைய நாள் டாஸ் முதல் கடைசியில் தோற்றது வரை இந்தியாவுக்கு தலைகுனியும் நாளாக அமைந்தது. முதல் 5 ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியை துவக்கினர். அப்போது இந்தியா குறைந்தபட்சம் ரவுண்டு தி விக்கெட் திசையிலிருந்து பவுன்சர் பந்துகளை வீசி போராடியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த ஆக்ரோசத்தையும் காட்டவில்லை”

“தற்போது இந்திய கிரிக்கெட்டில் நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. குறிப்பாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா நிரந்தரமாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று கூறினார். முன்னதாக 1992 உலகக்கோப்பையில் இதே போல் இங்கிலாந்தை தோற்கடித்து இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்ற பாகிஸ்தான் இம்முறை பாபர் அசாம் தலைமையில் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் உறுதியாக நம்புவது குறிப்பிடத்தக்கது.

Advertisement