ஐபிஎல் தொடரில் இனி ஆடவே முடியாத 5 வீரர்கள். பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சிறப்பான வீரர்கள் – லிஸ்ட் இதோ

IPL-bowlers-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த 13 ஐபிஎல் தொடர்களில் விளையாடிய வீரர்கள் கூட இன்னும் இருக்கிறார்கள் அப்படி பல ஆண்டுகள் விளையாடி இனிமேல் அவர்களால் விளையாட முடியாமல் வெளியேற்றப்படும் நிலையில் இருக்கும் வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம். ஏற்கனவே ஒவ்வொரு அணியிலும் இருந்து மோசமாக விளையாடிய வீரர்களை வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சென்னையில் ஐ.பி.எல் தொடரின் ஏலமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Harbhajan

- Advertisement -

ஹர்பஜன்சிங் :

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஹர்பஜன்சிங். இவருக்கு 40 வயதாகிவிட்டது மும்பை அணியில் பல ஆண்டுகாலம் விளையாடிக் கொண்டிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி விட்டார். வயது மூப்பின் காரணமாக இந்த முறை இவர் ஏலத்தில் எடுக்கப்படுவது சந்தேகம்தான்.

vijay

முரளி விஜய் :

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிக்காக விளையாடியவர் முரளி விஜய் கடந்த மூன்று வருடமாக அவரால் பெரிதாக ஆட முடியவில்லை. உள்ளூர் போட்டிகளில் இவர் தற்போது விளையாடவில்லை எனவே இந்த வருடமும் இவர் ஏலத்தில் புறக்கணிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

கருண் நாயர் :

- Advertisement -

கர்நாடக வீரரான கருண் நாயர் கடந்த பல போட்டிகளில் ஐபிஎல் தொடரில் விளையாடியும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. நடந்து முடிந்த உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். சென்ற வருடம் நான்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 16 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவரது ஆட்டத்தைப் பார்க்கும் போது எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்காது என்றே தெரிகிறது.

ஜேசன் ராய் :

- Advertisement -

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் இவர் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடைசி வரை இவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. துவக்க வீரராக களமிறங்கயே பழக்கப்பட்டவர். இவர் எந்த ஒரு அணியிலும் இவருக்கு அந்த இடம் கிடைக்கவில்லை 2018ஆம் ஆண்டு 5 போட்டிகளில் விளையாடி 120 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த முறை ஏலத்திலும் இவர் எடுக்கப்படுவது சந்தேகம்தான்.

Jadhav-2

கேதர் ஜாதவ் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சரியாக விளையாடாததன் காரணமாக தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார் கேதர் ஜாதவ். இந்த வருடம் அவர் சென்னையில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இவருக்கும் இந்த வருட ஐபிஎல் கதவுகள் மூடப்படும் என்று தெரிகிறது.

Advertisement