டைமிங்கில் அசத்தும் அவர் அடுத்த தசாப்தத்தை ஆளப் போறாரு பாருங்க – இளம் இந்திய வீரரை பாராட்டும் ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சந்தித்த ஏமாற்ற தோல்விக்குப் பின் நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. ஆனால் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதே மழையால் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Shubman-Gill

- Advertisement -

நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ள இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் சுப்மன் கில் முதல் போட்டியில் 50 ரன்களும் மழையால் ரத்தான 2வது போட்டியில் 45* (42) ரன்களும் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றியதால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த காபா வரலாற்று வெற்றியில் 91 ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

டைமிங் கில்லி:

அதை தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திரமாக போற்றப்படுகிறார்.

Shubman Gill

அதை விட அதிரடி சரவெடியாகவும் அல்லாமல் ஆமை வேகத்திலும் அல்லாமல் சீராக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது அவருடைய ஸ்டைலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தற்போதுள்ள இளம் பேட்ஸ்மேன்களில் நல்ல டைமிங், ஃபுட் ஒர்க், டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேனாக இருக்கும் சுப்மன் கில் தரையோடு தரையாக இடைவெளிகளை பார்த்து அடிப்பதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். மொத்தத்தில் தரமான பேட்ஸ்மேனுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவர் அடுத்த தசாபத்தை ஆள்வார் என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டைமிங் கொடுத்து பந்தை அடிப்பதிலேயே அவரது பேட்டிங்கில் முக்கியத்துவமாக காணப்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் தடுமாறும் போது பந்தை கடினமாக இழுத்து அடிக்க முயற்சிப்பீர்கள். ஆனால் அதை செய்யாத அவருடைய ஃபுட் ஒர்க் நல்ல கட்டுப்பாட்டுடன் உள்ளது. அந்த வகையில் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் பேட்டிங்கில் ஏதோ ஒரு ராஜாங்கம் இருக்கிறது. அதனால் தரமான வீரராக தெரியும் அவர் தசாப்தங்களை கடந்து அசத்தப்போகிறார். அவர் தன்னுடைய பலத்தில் கடினமாக உழைக்கிறார். நல்ல பயிற்சிகளை எடுக்கும் அவரிடம் இந்த விளையாட்டின் மீது அன்பும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியும் உள்ளது”

Shastri

“அந்த வகையில் நல்ல வளர்ச்சியை கண்டு வரும் அவர் நிச்சயம் இதே போல் தொடர்ந்து விளையாடுவார். அத்துடன் அவர் பெரும்பாலும் மைதானத்தின் தரையோடு தரையாக அடிக்கிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல வேகத்தை விட விவேகமே சிறந்தது என்ற ஸ்டைலை பின்பற்றும் சுப்மன் கில் தரையோடு தரையாகவும் சீரான வேகத்திலும் ரன்கள் குவிக்கும் திறன் பெற்றுள்ளார். அதனாலேயே இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் நாளடைவில் டி20 கிரிக்கெட்டிலும் தேவையான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement