DC vs SRH : பந்துவீச்சு தான் இப்படினா. த்ரோ கூடவா சரியாக அடிக்கமுடியாது – வீடியோ

Axar
- Advertisement -

நேற்றைய டெல்லி மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 130 ரன்களை குவித்தது. அதற்கடுத்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி வீரரான டேவிட் வார்னர் ஒரு பந்தினை அடிக்க அதனை பவுண்டரி லைனில் நின்றிருந்த டெல்லி அணி வீரரான லாமிச்சனே பிடித்து கீப்பரான ரிஷப் பண்டினை நோக்கி த்ரோ செய்தார்.அந்த த்ரோ எப்படி இருந்தது என்று சொல்வதை விட விடியோவாக நீங்களே பாருங்கள். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களை அடித்தார்.

பிறகு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக பேர்ஸ்டோ 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். பிறகு ஆடிய மற்ற வீரர்கள் அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Delhi Capitals : தோல்வி வேதனையை விட இவர்களது நிலைமை எனக்கு வருத்தத்தை அளிக்கிறது – ஐயர் தடாலடி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement