Delhi Capitals : தோல்வி வேதனையை விட இவர்களது நிலைமை எனக்கு வருத்தத்தை அளிக்கிறது – ஐயர் தடாலடி

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களை அடித்தார்.

Dc vs Srh

- Advertisement -

பிறகு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக பேர்ஸ்டோ 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். பிறகு ஆடிய மற்ற வீரர்கள் அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து பிறகு டெல்லி கேப்டன் ஐயர் கூறியதாவது : கடந்த இரு போட்டிகளாக டெல்லி அணி ஏமாற்றத்தினையே கண்டு வருகிறது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதனால் 140-150 ரன்கள் வரை அடித்தால் போதும் என்றே நினைத்தேன். ஆனால், எதிர்பாராவிதமாக எங்களால் அவ்வளவு ரன்கள் அடிக்க முடியவில்லை. என்னுடன் ஒருவர் நல்ல பாட்னர்ஷிப் அமைத்திருந்தால் நல்ல டார்கெட் நிர்ணயித்து இருக்க முடியும்.

Iyer

ஆனால், இந்த போட்டியிலும் எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. கடந்த போட்டியை காட்டிலும் இந்த போட்டி சற்று ஆறுதலை தந்தாலும் வெற்றி ஒன்றே இங்கு முக்கியம். அதனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பினை உணர்ந்து ஆடவேண்டும். பந்துவீச்சு டெல்லி அணியிடம் பலமாகவே உள்ளது என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Hardik Pandya : ஹெலிகொப்டர் சிக்ஸை பார்த்து தோனி என்னிடம் வந்து என்ன கூறினார் தெரியுமா ? – பாண்டியா விளக்கம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement