தோனியை நாம் கிரிக்கெட்டின் உண்மையான ஜென்டில்மேனாக பார்த்த தருணங்கள் இவர்தான் – பிறந்தநாள் சிறப்பு பதிவு

Dhoni
- Advertisement -

கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பது அனைவருடைய பொதுவான கருத்து ஆனால் அப்படி ஜென்டில்மேன் போன்று கிரிக்கெட்டில் நடந்துகொள்ளும் வீரர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அந்த வகையில் பல வீரர்களை நாம் பார்த்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்தப் பட்டியலில் முக்கிய இடம் உண்டு என்றால் அது உண்மையை.

Dhoni-4

- Advertisement -

ஏனெனில் அவர் சக வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம், எதிர் அணி வீரர்களுடன் நடந்து கொள்ளும் விதம், ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் ஆகிய ஒவ்வொருவரையும் களத்தில் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை நாம் கண்கூட கண்டிருக்கிறோம். எப்பொழுதும் பொறுமையை கடைபிடிக்கும் நபராக தோனி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கேப்டன் கூல் என்ற ஒரு பெயரும் உள்ளது. அந்த அளவிற்கு தோனி ஜென்டில்மேனாக இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் காரணமாக அமைந்துள்ளன. அவற்றை இந்த பதிவும் பார்ப்போம் .

தோனிக்கு இன்றளவும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் அவருடைய அணுகுமுறை தான். அப்படி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை பெற்று புகழின் உச்சத்தில் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் சக வீரர்களுடன் சகஜமாக பழகும் தன்மை உடையவர். அந்த வகையில் தான் ஆரம்ப காலகட்டத்தில் இந்திய அணி மூன்றாம் நிலை வீரராக களமிறங்க காரணமாக இருந்த தனது கேப்டன் கங்குலியை அவர் இறுதிப்போட்டியில் கேப்டனாக மாற்றி அழகு பார்த்தார்.

Ganguly-dhoni

கங்குலி விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் தனது கேப்டன்ஷிப்பை துறந்து கங்குலியை ஒரு நாள் முழுக்க கேப்டன் ஆக்கினார் அந்த ஒரு நிகழ்வை நாம் யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் முனாப் பட்டேல் பந்தை சிக்சருக்கு அடித்த பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்த டூப்ளிஸிஸை சற்றும் யோசிக்காமல் அவரது முதலுதவிக்காக அவரது இரு கால்களையும் பிடித்து தன் மார்போடு அணைத்து அவர் செய்த உதவி யாராலும் மறக்க முடியாத நிகழ்வு.

- Advertisement -

எல்லாவற்றுக்கும் மேலாக தோனியின் ஜென்டில்மேன் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது எப்போது அணி வெற்றி அடைந்தாலும் வெற்றிக்கு காரணமான நபர்களை முன்னிறுத்தி வைப்பார் மேலும் அணியின் இளம் வீரர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் கைகளில் வெற்றி கோப்பையை தந்துவிட்டு ஒரு ஓரமாக நிற்கும் பழக்கத்தை வைத்திருக்கும் தோனிக்கு அந்த அணுகுமுறைக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருப்பது உண்மையே.

Faf 1

மேலும் எப்பொழுது ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்றால் பேட்டிக்கு வெற்றிக்கான நபரை அனுப்பும் தோனி தோல்வியடைந்தால் தானே முன்வந்து அணியின் கேப்டனாக அந்த தோல்விக்கு பொறுப்பேற்று செய்தியாளர்கள் சந்திப்பது வழக்கம். இதே போன்று பல சம்பவங்களும் அவர் அதை அணுகும் விதம்தான் ஜென்டில்மேனாக அறியவைத்தது. புகழின் உச்சத்திற்கு சென்றாலும் தோனி இன்றளவும் இளம் வீரர்களுடன் எளிமையாக பழகும் தன்மை உடையவர்.

ஏற்கனவே இந்திய வீரர்கள் முன்னாள் வீரர்கள் பலர் தோனியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும் என்றும் அவரது அறைக்கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் 39 ஆவது பிறந்தநாளான இன்று அவருக்கு கமெண்ட் செக்சனில் உங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

Advertisement