இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது 42 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி பினிஷராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் அவரது ஆட்டத்தை காணவே இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஒவ்வொரு மைதானத்திலும் படையெடுத்து இருந்தனர்.
2024-ல் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் :
அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸ்கலில் மட்டுமே பேட்டிங் செய்த தோனி அதில் 8 முறை நாட் அவுட்டாக இருந்து 14 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர் என 161 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரது இறுதிநேர சிறப்பான ஆட்டத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 43 வயதினை எட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டும் இதே போன்ற அதிரடியை தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
42 வயதான ஒரு வீரர் இப்படி ஐபிஎல் தொடரில் இறுதி நேரத்தில் களமிறங்கி பினிஷ்ராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் தோனி என்ன ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அவர் விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் 220.54 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி அசத்தியுள்ளார். 2022-ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரை பொருத்தவரை 110 முதல் 130 வரையில் தான் அவரது ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. ஆனால் கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் 182 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : 16 வயது தமிழக வீராங்கனையை 1 கோடியே 60 லட்சத்திற்கு வாங்கிய மும்பை அணி – யார் இந்த கமாலினி?
இவ்வேளையில் நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் தொடரில் 220.54 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடியுள்ளது ஆச்சரியப்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் நான்கு கோடி ரூபாய்க்கு அன்கேப்ட்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.