தோனி ஒரு சிறந்த பினிஷெர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து கொண்டே வருகிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் தனது பினிஷிங் ஷாட்டுகள் மூலம் ஸ்டைலாக போட்டிகளில் முடித்துள்ளார் தோனி.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் தனது ஸ்டைலை நிரூபித்துள்ளார் தோனி. நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி புனே மைதானத்தில் நேற்று (மே 20) நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தினால் மட்டுமே பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆடியது பஞ்சாப் அணி.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது.
https://t.co/GGCVYQP4wC: CSK vs KXIP – #MSDhoni Six
— CricShots (@cric_shots) May 20, 2018
பின்னர் களமிறங்கி சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19 ஓவர்கள் முடியவில் 1 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் தோனி சிக்சர் ஒன்றை அடித்து தனது ஸ்டைலில் போட்டியை முடித்தார்.