- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? ரூல்ஸ் சொல்வது என்ன? – விவரம் இதோ

2024-ஆம் ஆண்டிற்கான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் முடிவடைந்து அடுத்ததாக அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்து தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய வேளையில் அதில் வெற்றி பெற்ற நான்கு அணிகளும் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அந்த வகையில் குரூப் ஒன்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் இரண்டில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. அந்த வகையில் இந்த அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணியும் மோத இருக்கின்றன.

- Advertisement -

அதன்படி இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத இருக்கின்றன. இந்நிலையில் அந்த போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்பு வெளியாக்கியுள்ளது.

மேலும் போட்டி நடப்பதற்கு முன்பு சுமார் 3 மணி முன்பாக 60% மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் போட்டி நேரத்தின் போது இடையிடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி முழுவதும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஒருவேளை இந்த அரயிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? அதற்கு ரூல்ஸ் சொல்வது என்ன? என்பது குறித்த கேள்விகளுக்கு இந்த தொகுப்பில் பதில் காணலாம். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என்பதனால் போட்டி மழையால் பாதிக்கப்படும் வேளையில் கூடுதலாக 250 நிமிடங்கள் வரை அதிக நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : நாங்கள் தோற்றிருந்தாலும் பரவாயில்ல.. மீண்டும் இது நடந்திருப்பது மகிழ்ச்சி – வெ.இ கேப்டன் பவல் கருத்து

எனவே மழையால் போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஏற்றார் போல் ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. ஒருவேளை அப்படி அந்த 250 நிமிடங்களையும் தாண்டி மழையால் போட்டி நடைபெறாமல் போனால் சூப்பர் 8 சுற்றில் முதலிடத்தில் இருந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்வதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தோல்வியையே சந்திக்காமல் முதலிடத்தில் இருந்துள்ளதால் இந்திய அணியே அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -