இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் துவங்க இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடும் என்பதனால் இவ்விரு அணிகளுக்குமே இது மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
குவாலிபயர் 2 போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? :
இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய தயாரானார்கள்.
ஆனால் தற்போது மழை காரணமாக போட்டி தாமதப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவேளை இந்த போட்டியின் போது மழை விடாமல் பெய்தால் என்ன நடக்கும்? அதற்கு ஐ.பி.எல் விதிமுறைகள் என்ன கூறுகின்றன என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் உள்ளது.
அந்த வகையில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் குறைந்தது 5 ஓவர் போட்டியாவது நடைபெறும். மழை பெய்யும் நேரத்தின் அடிப்படையில் ஓவர்கள் குறைக்கப்டுவது பற்றி நிர்ணயிக்கப்படும்.
ஒருவேளை அந்த ஐந்து ஓவர் போட்டியும் நடைபெறாமிடாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கையில் இன்றைய போட்டியில் மழையால் ரத்து செய்யப்பட்டால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எல்லாம் கம்பீரோட சப்போர்ட்டா? இங்கிலாந்துலேயே இருக்க ஹர்ஷித் ராணாவுக்கு பறந்த உத்தரவு – விவரம் இதோ
ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரானது இடையில் ஒரு வாரம் தற்காலிகமாக தடை பட்டதால் இந்த குவாலிபயர் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



