எல்லாம் கம்பீரோட சப்போர்ட்டா? இங்கிலாந்துலேயே இருக்க ஹர்ஷித் ராணாவுக்கு பறந்த உத்தரவு – விவரம் இதோ

Gambhir and Harshit
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கான 18 பேர் கொண்ட முழுமையான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட தயாராகி வருகிறது.

ஹர்ஷித் ராணாவை தக்கவைத்த பி.சி.சி.ஐ :

இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்திய ஏ அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு பயணித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் பயிற்சி போட்டி நடைபெற்று வரும் வேளையில் இரண்டாவது பயிற்சி போட்டியில் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பயிற்சி போட்டிகளுக்கான இந்திய ஏ அணியுடன் பயணித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை பயிற்சி போட்டிகள் முடிந்த பின்னர் நாடு திரும்ப வேண்டாம் என்றும் முதன்மை இந்திய அணியுடன் இணைந்து இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் ஏற்கனவே இந்திய அணியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இருந்தாலும் பும்ரா பணிச்சுமை காரணமாக அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்சித் ராணாவை அங்கே நிற்கவைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த முடிவிற்கு பின்னால் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : கோமாளி மாதிரி அதை செய்ய விரும்பல.. பும்ரா கருத்தால் விராட் கோலி ரசிகர்கள் கோபம்.. காரணம் என்ன?

ஏனெனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த அவர் ஹர்ஷித் ராணா மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு தந்து வருவதால் தான் இந்த தொடரிலும் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement