WTC Final : ஒருவேளை மழையால் போட்டி நின்றால் இந்தியா தப்பிக்குமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியானது இன்று போட்டியின் கடைசி நாளான ஐந்தாம் நாளை எட்டியுள்ளது. இன்றைய கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதே வேளையில் கைவசம் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

Jadeja 1

- Advertisement -

இதன் காரணமாக இந்த போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் இந்த கடைசி நாள் ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்கிற பரபரப்பான சூழ்நிலையில் ஓவல் மைதானத்தில் இன்று மழை பெய்ய 90 சதவீத வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிக்கை வெளியாகி உள்ளது.

அதோடு இடியுடன் கூடிய மழை பெய்யவும் 36 சதவீதம் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகலில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவில் தான் மழை குறையும் என்றும் கூறப்படுகிறது.

Rain 1

எனவே இப்படி ஒருவேளை இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்த தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் நாளை ஆறாவது நாள் ரிசர்வ் டே போட்டி நடைபெறும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக மழை பெய்து எவ்வளவு நேரம் போட்டி பாதிக்கப்படுகிறதோ அந்த குறிப்பிட்ட நேரம் வரையே நாளைய போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மழை அல்லது மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை போன்ற ஒரு சில குறிப்பிட்ட காரணத்தினால் போட்டி பாதிக்கப்பட்டால் மட்டுமே ரிசர்வ் டே போட்டி நடைபெறும்.

இதையும் படிங்க : வீடியோ : அது மட்டும் சிக்ஸர் ஆனா இது மட்டும் அவுட்டா? இந்தியாவுக்கு நிகழ்ந்த அநீதி – கொந்தளித்த கவாஸ்கர், சாஸ்திரி

ஒருவேளை இன்றும் மழை பெய்து நாளைய ரிசர்வ் டே நாளிலும் மழை பெய்து போட்டி முழுவதுமாக நடத்தப்படாமல் போனால் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement