ஏழை குடும்பம், இவ்ளோ பெரிய பணத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை – நெஞ்சை தொடும் இளம் இந்திய வீரரின் பின்னணி கதை

RInku Singh Family
- Advertisement -

இந்தியாவில் இருக்கும் பல அடையாளம் தெரியாத திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் அந்த வேலையை ஒவ்வொரு வருடமும் கச்சிதமாக செய்து வருகிறது. இதில் எத்தனையோ ஏழைக் குடும்பத்தில் பிறந்த இளம் வீரர்கள் தங்களது திறமையால் உள்ளூர் கிரிக்கெட்டில் உழைத்து அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்து கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்து தங்களது வாழ்வில் வளமான முன்னேற்றத்தை கண்ட கதைகளைப் பார்த்தோம்.

Rinku

- Advertisement -

அது போன்ற ஒரு நெஞ்சை தொடும் நெகிழ்ச்சியான கதையை கொண்டவர்தான் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இளம் வீரர் ரிங்கு சிங் ஆவார். பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா 14 போட்டிகளில் 8 தோல்விகளுடன் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டது. தனது கடைசி லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொண்ட அந்த அணியை அடித்து நொறுக்கிய குயின்டன் டி காக் – கேஎல் ராகுல் ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 210/0 ரன்களை சேர்த்து பார்ட்னர்ஷிப் போடுவதில் புதிய வரலாறு படைத்தனர்.

போராடிய ரிங்கு:
அதனால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்ட கொல்கத்தா எளிதாக தோற்று விடும் என அனைவரும் நினைத்தனர். அதற்கேற்றார் போல் வெங்கடேஷ் ஐயர் 0 (4) அபிஜித் தோமர் 4 (8) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி தோல்வி ஆரம்பத்திலேயே உறுதி செய்தனர். இருப்பினும் நிதிஷ் ராணா 42 (22) ஷ்ரேயஸ் ஐயர் 50 (29) சாம் பில்லிங்ஸ் 36 (24) ஆகியோர் அதிரடியாக ரன்களை அடித்து வெற்றிக்காக போராடினார்கள். ஆனாலும் காப்பாற்றுவார் என கருதப்பட்ட ஆண்ட்ரே ரசல் 5 (10) ரன்களில் அவுட்டானதால் தோல்வி உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த சுனில் நரைன் – ரிங்கு சிங் சாகும்வரை போராட்டம் என்பது போல் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.

Evin Lewis Rinku SIngh Catch

அதில் சுனில் நரேன் 21* (7) ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய அந்த ஓவரில் 4, 6, 6, 2 என 18 ரன்களை தெறிக்கவிட்ட ரின்கு சிங் 5-வது பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற போது சூப்பர்மேனை போல தாவிப்பிடித்த எவின் லெவிஸ் அவரின் போராட்டத்தை வீணாக்கியதால் கொல்கத்தா வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 40 (15) ரன்கள் எடுத்து வெற்றிக்காக உயிரைக் கொடுத்துப் போராடிய ரிங்கு சிங் மனமுடைந்து கண் கலங்கியதும் சக வீரர் நிதிஷ் ராணா அவரை சமாதானப் படுத்தியதை பார்த்த அத்தனை ரசிகர்களும் உணர்ச்சியுடன் நெகிழ்ந்து போய் மனதாரப் பாராட்டினார்கள்.

- Advertisement -

ஏழை குடும்பம்:
உத்திர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியின் ஒரு ஏழை குடும்பத்தில் 1997இல் பிறந்த இவர் 9ஆம் வகுப்பில் ஃபெயிலானதால் படிப்பை விட்டுவிட்டு கிரிக்கெட் மீது இருந்த காதலால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்கினார். வீடு வீடாக சென்று சிலிண்டர் வினியோகிக்கும் அவர் தந்தைக்கு அந்த கம்பெனி கொடுத்த ஒரு சிறிய ஸ்டோரேஜ் அறையில் தாய், தந்தை, தம்பி, தந்தையுடன் வசித்து வந்த அவர் கிரிக்கெட்டில் பங்கேற்றார்.

rinku

இருப்பினும் குடும்பத்தை நடத்த தடுமாறியதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் அவரது தம்பி தன்னுடன் வந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் கிரிக்கெட்டில் ஒரு நாள் சாதிப்பேன் என்ற முயற்சியுடன் தொடர்ந்து விளையாடி வந்த அவர் படிப்படியாக முன்னேறி ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பிடித்து 2018 சீசனில் 4 சதங்கள் உட்பட 953 ரன்கள் எடுத்து பெரிய முன்னேற்றம் கண்டார்.

- Advertisement -

அதனால் 2018இல் கொல்கத்தா அணிக்காக 80 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர் கடந்த 2021 வரை வெறும் 3 வருடங்களில் 10 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்து வந்தார். இருப்பினும் இந்த முறை மீண்டும் 55 லட்சத்துக்கு வாங்கிய கொல்கத்தா அணி நிர்வாகம் 7 போட்டிகளில் வாய்ப்பளித்தது. அதை சரியாக பயன்படுத்திய அவர் 174 ரன்களை 34.80 என்ற சராசரியில் 148.72 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து கொல்கத்தாவின் சமீபத்திய சில வெற்றிகளுக்கு பங்காற்றினார். குறிப்பாக லக்னோ எதிரான போட்டியில் அவரின் போராட்டம் வரும் வருடங்களில் அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

rinku

பெரிய காசு:
இந்நிலையில் தம்மை பெரிய தொகைக்கு வாங்கி வாய்ப்பளித்து வாழ்வளித்த கொல்கத்தா நிர்வாகத்தைப் பற்றி அந்த போட்டி முடிந்த பின் ரின்கு சிங் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா உன்னை வாங்கப் போகிறது என்று நிதிஷ் ராணா என்னிடம் கூறினார். அதனால் அவர்களுக்காக மீண்டும் விளையாட போகிறேன் என்று உறுதியாக இருந்தேன். கொல்கத்தா அணி எனது வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் கொல்கத்தா என்னை 80 லட்சத்துக்கு வாங்கிய போது எனது வாழ்வில் இருந்து பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்தன. எனது குடும்பத்தில் யாருமே அவ்வளவு பெரிய பணத்தை பார்த்ததே கிடையாது. அது மிகப்பெரிய தொகையகும். ஏனெனில் எனது தந்தை மாதம் வெறும் 10 – 12 ஆயிரங்கள் தான் சம்பாதிப்பார். எனவே எனது குடும்பம் என்னால் மிகவும் பெருமையடைகிறது”. “ஒருமுறை காயமடைந்த போது எனது தந்தை 2 – 3 நாட்கள் சாப்பிடவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டில் இது சாதாரணம் என்று அவரிடம் நான் கூறினேன். முதல் வருடத்தில் கொல்கத்தா என்னை தேர்வு செய்த பின் கிடைத்த வாய்ப்பில் நான் சிறப்பாக செயல்படவில்லை.

இதையும் படிங்க : இந்த சீசன் முழுவதுமே எனக்கு அந்த வருத்தம் இருந்தது. குஜராத் அணிக்கெதிரான அதிரடிக்கான – காரணத்தை கூறிய கோலி

இருப்பினும் அவர்கள் என்மீது நிறைய நம்பிக்கை வைத்து அடுத்த சீசன்களிலும் தக்க வைத்தனர். அதன்பின் கடினமாக பயிற்சி செய்யும்போது விஜய் ஹசாரே தொடரின் போது காயமடைந்த எனக்கு 6 – 7 மாதங்கள் குணமடைய தேவைப்பட்டது. அதனால் சோகம் அடைந்த என்னால் அதிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பினேன்” என பேசினார்.

Advertisement