சி.எஸ்.கே அணியின் 5 நாள் பயிற்சிக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன ? – காசி விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கை

csk
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் பயணத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று முதல் 20ம் தேதி வரை 5 நாட்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

ipl

- Advertisement -

மேலும் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணைக்கேப்டன் ரெய்னா,தீபக் சாகர், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, மோனு குமார் ஆகிய 6 வீரர்களும் விமானத்தில் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த சி.எஸ்.கே வீரர்கள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக வீரரான பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி நடைபெறஉள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சி நாட்களுக்கான கடும் கட்டுப்பாடுகளை சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சி.எஸ்.கே அணியின் CEO காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் இதோ :

Dhoni

பயிற்சி நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் வீரர்கள் கட்டாயமாக மாஸ்க் (முகக்கவசம்) அணிந்திருக்க வேண்டும். மேலும் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் கைகுலுக்குதல், கட்டி அணைத்தல் போன்றவை கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Dhoni

மேலும் வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அறையில் குடும்பத்தினர், நண்பர்கள், வெளிநபர்கள் என யாருடனும் பேசவோ, நேரில் சந்திக்கவோ அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி மைதானத்தில் உள்ள ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement