காயமடைந்த முகமது சிராஜிக்கு பதிலாக 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்கிற காரணத்தினால் இந்த கடைசி போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

siraj 2

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இடம்பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட சிராஜ் மூன்றாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு பதிலாக 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாட போவது யார்? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

அதற்கு விடையாக தற்போது இரண்டு வீரர்கள் அவரது இடத்திற்காக காத்திருக்கின்றனர். ஒருவர் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இஷாந்த் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை தற்போது உள்ள இந்திய அணியில் அதிக அனுபவம் பெற்ற வீரரான இவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும் தனது கண்ட்ரோல் மூலம் இந்திய அணிக்காக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

umesh

அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்த அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் உமேஷ் யாதவ்-க்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அவரை பத்தி தெரியாம நானும் தப்பா பேசிட்டேன். ஆனா அவரு கலக்கிட்டாரு – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ்-க்கு பதிலாக யார் விளையாடலாம் என்பது குறித்த உங்களது கருத்துக்களை எங்களது கமென்ட் பகுதியில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement