அவரை பத்தி தெரியாம நானும் தப்பா பேசிட்டேன். ஆனா அவரு கலக்கிட்டாரு – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 11-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Elgar

- Advertisement -

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிதளவு சறுக்கலை சந்தித்திருந்தாலும் ஷர்துல் தாகூர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் பேட்டிங்கின் போதும் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது பந்து வீச்சாளராக களமிறங்கிய போது நானும் இது தேவையான ஒன்றுதானா என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திவிட்டார்.

thakur

முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்கள் தடுமாறி நிலையிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி ஒரு வீரர் பௌலிங் பேட்டிங் என இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டது இந்திய அணிக்கு தேவையான ஒன்று என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஷர்துல் தாகூர் இப்போதுதான் மெல்ல மெல்ல தனது டெஸ்ட் கரியரை தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனது அந்த கடைசி ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் அடிக்க இதுவே காரணம் – ஹர்ஷல் படேல் ஓபன்டாக்

இப்படி அவர் பவுலிங்கில் 7 விக்கெட் வீழ்த்தியது எல்லாம் மிகப் பெரிய சாதனை. அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவரது கணிசமான ரன் குவிப்பை தொடர்ச்சியாக வழங்கிவருவது பாராட்ட வேண்டிய ஒன்று. அந்த வகையில் நிச்சயம் ஷர்துல் தாகூர் சிறப்பான வீரர் தான் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement